Advertisment

தனுஷ் பிறந்தநாள் - 'வாத்தி' படக்குழுவின் ஸ்பெஷல் அறிவிப்பு

dhanush vaathi movie first look and teaser update released

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்த தனுஷ் அடுத்து டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தமிழில் 'வாத்தி' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இசைப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="eec0fc8c-27c4-40e5-985f-193bb788e00b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_0.jpg" />

Advertisment

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 27-ஆம் தேதியும் டீசர் 28-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இதனை தனுஷ்தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். இப்படத்தின் அப்டேட் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. தனுஷ் வருகிற 28-ஆம் தேதி தனது 40-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனுஷ் ஹாலிவுட்டில் நடித்த 'தி கிரே மேன்' படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தனுஷ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

vaathi movie actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe