கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடித்து முடித்த கையோடு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, யோகி பாபு, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாகின. அதில் ஒரு படத்தில் பழைய காவல் நிலையம்போல வண்ணம் தீட்டப்பட்டு, மேலும் அதில் மணியாச்சி காவல் நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் லேசான சலசலப்பு இந்த படம் குறித்து உருவாக தொடங்கியது.
இந்த படம் 1991ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற சாதி கலவரம் ஒன்றை மையமாக வைத்துதான் உருவாகிறது என்று கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்குனர் மாரி செல்வரஜ் மீது குற்றச்சாட்டு வைத்து அறிக்கை வெளியிட்டது. மேலும் அதில் மாரிசெல்வராஜை கைது செய்ய வேண்டும், படத்தை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் தனுஷ் இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாகவும், மொத்தமாக படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிக்கப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் புகைப்படம் ஒன்றுடன், பதிவிட்டு தெரிவித்துள்ளார்.