Advertisment

"நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர்"- தனுஷ் ட்வீட்

dhanush tweet about Arun Matheswaran and SaaniKaayidham

இயக்குநர்அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சாணிக்காயிதம். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பழிவாங்கும்கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டசாணிக்காயிதம் திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்களில்ஒரு சாரார் கலவையான விமர்சனங்களையும், இன்னொரு சாரார் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"அற்புதமான கொடூரமான பழிவாங்கும் படத்தை உருவாக்கிய சாணிக்காயிதம் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் அருண் மாதேஸ்வரன்.நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

'வாத்தி' படத்தில் நடித்த வரும் தனுஷ் அடுத்தாகஅருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

actor dhanush director arun matheswaran saanikaayidham selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe