தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தனுஷ் 43' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ரூஸோ சகோதரர்கள் இயக்கும் 'தி க்ரே மேன்' படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டின் இறுதியில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ராயன் காஸ்லிங் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கபடக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் நாளை அமெரிக்கா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
'தி க்ரே மேன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'தனுஷ் 43' படக்குழுவினரோடு தனுஷ் மே மாதத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.