இயக்குநர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. செல்வா, யுவன், அரவிந்த், நா.முத்துக்குமார் இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவில் பலரைத் தங்களின் படைப்புகளால் கவர்ந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
புதுப்பேட்டை படத்தைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் தனுஷ் 'திருடன் போலீஸ்' என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்குவதாக இருந்தார் அரவிந்த் கிருஷ்ணா. இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட, நா. முத்துக்குமார் பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்தப் படத்தின் போஸ்டரும் அப்போது செய்தித் தாள்களில் வெளியானது. அதன்பின் தனுஷ் இந்தப் படத்திலிருந்து நடிப்பதைக் கைவிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.