/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/283_3.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிற 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் தமிழ் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பியுள்ளது. சென்சார் போர்ட் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் தெலுங்கு ட்ரைலரை படக்குழு தற்போதுவெளியிட்டுள்ளது. 'திரு' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது.
இதனிடையே செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ். தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)