Advertisment

தனுஷ் எழுதி பாடிய பாடல் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

dhanush 'thiruchitrambalam' movie secon single 'Megham Karukatha' lyric video released

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் 'தாய் கிழவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இரண்டாவது பாடல் 'மேகம் கருக்காதா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மெலோடி பாடலாக வெளியாகியுள்ள இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். பெரும்பாலும் தனுஷ் எழுதி பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில் இப்பாடலும் அந்த ஹிட்லஸ்டில் இடம்பெறும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor dhanush Thiruchitrambalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe