/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1337.jpg)
தமிழ் திரைத்துறையில் கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்பிற்காக அதிக தேசிய விருதுகளை வாங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தனுஷ். கோலிவுட்டில் ஆரம்பித்த தனுஷின் பயணம் தற்போது பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டோலிவுட் வரை தொடர்கிறது. நடிப்பைத் தாண்டி இயக்கம், எழுத்து பாடகர் என அடுத்தடுத்த தளங்களுக்குத் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் தனுஷ் நேற்று தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதற்காக ரசிகர்கள், இந்தியப் பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என ஏராளமான ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நலன் விரும்பிகள், திரைப் பிரபலங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரசிகர்களுக்கும் அவர்களின் அளவற்ற அன்புக்கும் நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்குப் பக்க பலமாக ஒரு தூணாக இருந்து என்னை ஆதரிக்கின்றனர். நீங்கள் காட்டும் அன்பால் நெகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
??? pic.twitter.com/8XZJd41GYl
— Dhanush (@dhanushkraja) July 29, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)