Skip to main content

தேசிய விருது வென்ற இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்! புதிய பட அறிவிப்பு!

 

giuugug

 

தேசிய விருது நடிகர் தனுஷ் அடுத்ததாக, தெலுங்கு திரையுலகில் தேசிய விருதை வென்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தை நாராயண் தாஸ், கே நாரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது.

 

மறைந்த திருமதி. சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18.06.2021) அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார். இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுவருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்