/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhanush_31.jpg)
காமெடி ஜானர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவரான இயக்குநர் ராஜேஷ், தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இசைப் பணிகளையும் ஜி.வி.பிரகாஷே கவனித்துக்கொள்ள, சன் என்டர்டைன்ட்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இப்பாடல் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)