"அடியாத்தி இது என்ன ஃபீலு" - தனுஷால் ஃபெயிலான சம்யுக்தா

dhanush starring vaathi movie Vaa Vaathi Lyrical song released

தனுஷ், நேரடியாகத்தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத்தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வா வாத்தி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலைப் பார்க்கையில், கதாநாயகி சம்யுக்தா வாத்தியாராக வரும் தனுஷ் மீது ஒரு தலையாகக் காதல் கொள்கிறார். அந்தக் காதலை விவரிக்கும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பாடலில் வரும் 'அடியாத்தி இது என்ன ஃபீலு... உன்னால நான் ஃபெயிலு...' என இடம்பெறும் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலுக்கு தனுஷ் வரிகள் எழுத ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனுஷ் இப்பாடலைப் பாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்தப் பாடலின் லிரிக் வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

actor dhanush Samyuktha Menon vaathi movie
இதையும் படியுங்கள்
Subscribe