Advertisment

போஸ்டருடன் வெளியான தனுஷ் பட அப்டேட்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

dhanush starring naanae varuven movie new update out now

'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள்இருவரும் தற்போது 'நானே வருவேன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, யுவன் இசையமைக்கிறார்.செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நானே வருவேன் படப்பிடிப்புஇறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகதெரிவித்துள்ளார். அத்துடன் படத்தின்போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் வாயில் சிகரெட்டுடன் ஸ்டைலாகஅமர்ந்துள்ள தனுஷின் இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில்பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

actor dhanush naane varuven selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe