Advertisment

உலகளவில் தனுஷின் ரௌடி பேபி பாடல் சாதனை! எத்தனாவது இடம் தெரியுமா?

கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் வெளியான படம் மாரி 2. தனுஷ் மற்றும் பாலாகி மோகன் கூட்டணியில் உருவான இரண்டாவது படம். இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாரி முதல் பாகத்திற்கு அனிருத் இசயமைக்க இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Advertisment

dhanush

இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ யு-ட்யூபில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலின் நடனத்தை இயக்கியவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கடந்த ஏப்ரலில் பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதன்பின் சர்வதேசளவில் இந்த பாடலுக்கு கவனம் கிடைக்க யு-ட்யூபில் சரசரவென வைரலானது. 500 மில்லியன் பேர் பார்த்த முதல் தென்னிந்திய யு-ட்யூப் பாடல் என்ற சாதனையை படைத்தது. தற்போது இந்தப் பாடலுக்கு யூடியூபில் 720 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர். அதாவது 72 கோடி பேர்.

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="fb08e627-b5fb-40c8-b226-88306f521592" height="285" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_23.jpg" width="475" />

இந்நிலையில் இந்த வருடம் யு-ட்யூபில் அதிக பேர் பார்த்த விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7ஆம் இடம் கிடைத்துள்ளது.

DHANUSH sai pallavi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe