Skip to main content

உலகளவில் தனுஷின் ரௌடி பேபி பாடல் சாதனை! எத்தனாவது இடம் தெரியுமா?

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் வெளியான படம் மாரி 2. தனுஷ் மற்றும் பாலாகி மோகன் கூட்டணியில் உருவான இரண்டாவது படம். இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாரி முதல் பாகத்திற்கு அனிருத் இசயமைக்க இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
 

dhanush


இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ யு-ட்யூபில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலின் நடனத்தை இயக்கியவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரலில் பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதன்பின் சர்வதேசளவில் இந்த பாடலுக்கு கவனம் கிடைக்க யு-ட்யூபில் சரசரவென வைரலானது. 500 மில்லியன் பேர் பார்த்த முதல் தென்னிந்திய யு-ட்யூப் பாடல் என்ற சாதனையை படைத்தது. தற்போது இந்தப் பாடலுக்கு யூடியூபில் 720 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர். அதாவது 72 கோடி பேர்.
 

iruttu


இந்நிலையில் இந்த வருடம் யு-ட்யூபில் அதிக பேர் பார்த்த  விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7ஆம் இடம் கிடைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“இதான் என் முகம்” - உண்மைச் சம்பவக் கதையில் மேஜராக சிவகார்த்திகேயன்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
sivakarthikeyan rajkumar periyasamy movie amaran update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்குத் தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஹேர்ஸ்டைல் மாற்றியிருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் வெளியாகும் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘அமரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் வருகிறார். பயங்கரவாதிகளைத் தாக்க தனது டீமுடன், “இந்த ஆபரேஷனுக்கு எவனும் உன் முகத்த மூடாத. இதான் என் முகம், இந்தியன் ஆர்மியோட முகம்னு அவனுக்கு காட்டு” என வீரியமாக  அவர் பேசும் வசனங்கள் இடம் பெறுகிறது. 

இதுபோன்று தனது குழுவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் அவர் பேசும் பல வசனங்கள் டீசர் முழுவதும் இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன், “மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.