dhanush sings in arr music

தமிழில் முன்னணி நடிகர் தனுஷ். அசுரன், வட சென்னை என தொடர்ந்து பெரும் வெற்றி படங்களை தந்து வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான "தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் பக்கீர்" படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது.அப்படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கடந்த ஆண்டு வெளியானது.

Advertisment

பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து அமிதாப் பச்சனோடு ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து பாலிவுட்டில், முன்னணி நடிகரான அக்ஷய்குமாரோடு இணைந்து "அத்ராங்கி ரே" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராயே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு கரோனா தொற்று பாதிப்பால் தள்ளிப்போன படப்பிடிப்பு,சமீபத்தில் மதுரையில் தொடங்கியது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்காகஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இது தொடர்பாக, ஏ.ஆர். ரஹ்மானோடு எடுத்த செல்பியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனுஷ், "நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானோடு,உற்சாகமான பாடல் மற்றும் உரையாடலில் ஈடுபட்டேன்" என கூறியள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை டிசம்பர் மாதம் முடித்து, அடுத்த வருடம் காதலர் தினத்தன்று வெளியிட படப்பிடிப்பு குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.