Advertisment

"இந்தியப் படங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம்" - நடிகர் தனுஷ் பேச்சு

dhanush say dont split indian movies

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'அத்ரங்கி ரே' படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘கலாட்டா கல்யாணம்’ என்று படக்குழு பெயர் வைத்துள்ளது. கிருஸ்துமஸ்தினத்தை முன்னிட்டு ஹாட்ஸ்டாரில் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

Advertisment

சமீபத்தில் இது தொடர்பான நிகழ்ச்சிமும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ்," திரைப்படங்களை வடக்கு தெற்கு என பிரித்து பார்க்க வேண்டாம், அதை நான் எதிர்க்கிறேன். அனைத்து படங்களுமே இந்திய படங்கள் என்று அழைக்கப்பட வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

Galatta Kalyaanam actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe