Advertisment

"செக்ஸி தமிழ் ஃப்ரெண்ட்" - தனுஷ் கொடுத்த மாஸான அட்வைஸ்

dhanush said him self One Day A Big Hollywood Hero Will Call You

'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காகபுரொமோஷன் நிகழ்ச்சிகளில்கலந்துகொண்டுபல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரே மேன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளம் வயது தனுஷுக்கு நீங்கள் ஒரு அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் என்ன கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு தனுஷ், உன் தோற்றத்தை பார்த்து யாராவது கேலி செய்தால், அதனை பெரிதாக எடுத்துக் கொண்டுகவலைப்படவேண்டாம். ஒரு நாள் உன்னை ஒரு முன்னணி ஹாலிவுட் ஹீரோ 'செஸ்சி தமிழ் ப்ரெண்ட்' என்று அழைப்பார்" எனப் பதிலளித்துள்ளார்.

Advertisment

'தி கிரே மேன்' படத்தில் நடித்துள்ள கிறிஸ் ஈவான்ஸ்நடிகர் தனுஷை 'செஸ்சி தமிழ் ப்ரெண்ட்' என்று அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

tamil cinema actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe