dhanush said he was also have emi problem

தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

Advertisment

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட புரொமோஷனில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

Advertisment

மேலும் அந்த நிகழ்ச்சியில் தனுஷிடம் ஈ.எம்.ஐ., லோன் பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறதா என தொகுப்பாளினி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த தனுஷ், “எனக்கும் அந்த பிரச்சனை இருக்கிறது. நீங்கள் 150 ரூபாய்க்கு சம்பாதித்தால் 200 ரூபாய்க்கு ஒரு பிரச்சனை வருகிறது. 1 கோடி சம்பாதித்தால் 2 கோடிக்கு பிரச்சனை வருகிறது” என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.