நீங்கள் தயாரா? - அடுத்த ஹாலிவுட் படத்தின் அப்டேட்டை கொடுத்த தனுஷ்

dhanush said Gray Man universe expanding and sequel comingy

'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில்,வெளியான'தி கிரே மேன்’ படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங்குடன் இணைந்து தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் வெளியாகிஉலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் படத்தில் தனுஷ் வரும் காட்சிகள் குறைவாக இருந்ததாகக் கூறினர்.

இதனிடையேதனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தால் விரைவில் அவரது கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம்"என்று ரூசோ பிரதர்ஸ் கூறியிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரே மேன் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தி கிரே மேன் படத்தின் பிரபஞ்சம் விரிவடைகிறது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்தபக்கங்கள் வெளியாகவிருக்கிறது.லோன் வோல்ஃப்தயாராகவுள்ளது. நீங்கள் தயாரா?" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சமீபத்தில்'தி கிரே மேன்' படத்தின் சீக்குவல் அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறோம் எனரூசோ பிரதர்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

actor dhanush hollywood
இதையும் படியுங்கள்
Subscribe