/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gf_9.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். பத்து வருடத்திற்கு பிறகு தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது படமாகும். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதனை தனுஷ் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தனுஷ் அடுத்த படமான 'வாத்தி' படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையோடு தொடங்கியது. பின்பு தனுஷ் 'நானே வருவேன்' படத்தில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுற்ற நிலையில் மீண்டும் வாத்தி படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்றனர். தெலுங்கில் 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)