'நீ அழிக்க வந்த அசுரன்னா....' சிம்புவிற்கு பதிலடி கொடுத்த தனுஷ்?

dhanush

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிறு முன்னோட்டமாக வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரில் 'நீ அழிக்க வந்த அசுரன்னா... நான் காக்க வந்த ஈஸ்வரன்' என ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இது சிம்பு, நடிகர் தனுஷை மறைமுகமாக சீண்டுகிறாரா எனப் பல விவாதங்களை சமூக வலைதளங்களில் கிளப்பியது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரக்குறிப்பை 'அசுரன்/ நடிகர்' என மாற்றம் செய்துள்ளார். இது, நடிகர் சிம்புவிற்கு தனுஷ் கொடுத்த பதிலடி என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe