தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

mk stalin

Advertisment

Advertisment

அதன் தொடர்ச்சியாக தமிழக எதிர்கட்சித்தலைவரும், திமுக கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கி, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கத்திற்கு சென்று தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தை மு.க.ஸ்டாலின் பார்த்தார். அவருடன் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் படத்தை பார்த்து வருகின்றனர்.

அந்த படத்தை பார்த்துவிட்டு பின் ட்விட்டரில், “அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும், வெற்றிமாறன்-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும், தனுஷ்-வுக்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தனுஷ், “காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.