தனது நண்பருக்காக தனுஷ் வெளியிட்ட #IamBadBoy பாடல்!

srikanth

நடிகர் தனுஷ் நடித்து கிட்டத்தட்ட ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது 'ஜகமேதந்திரம்' திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் OTT ரிலீஸா தியேட்டர் ரிலீஸா எனதனுஷ் ரசிகர்கள் விவாதித்து வர, இன்று மாலை தனுஷ் தனதுட்விட்டர் பக்கத்தில் ஒரு பாடலை ரிலீஸ் செய்தார். அது அவரதுபடப்பாடல் அல்ல. ஸ்ரீகாந்த் நடித்துள்ள'மிருகா' படப்பாடல். 'I am a bad boy' என்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளவர் அருள்தேவ். பாடலை எழுதியுள்ளவர் A.R.P.ஜெயராம்.

நடிகர் ஸ்ரீகாந்த், 'ரோஜாக்கூட்டம்' திரைப்படத்தில் சசி இயக்கத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தஇளம் ஹீரோவாகத் திகழ்ந்தார். ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு எனவெற்றியையும் நேர்மறைவிமர்சனத்தையும் பெற்ற நல்ல படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். பிறகு 'ஜூட்' படத்தின் மூலம் ஆக்ஷன் பாதைக்கு சென்றார். அதன் பிறகு பல விதமான பாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரைஇளமை மாறாமல்ஆக்ட்டிவாக இயங்கி வரும் ஸ்ரீகாந்த்தின் அடுத்த படம் 'மிருகா'.

ஸ்ரீகாந்த்துடன் ராய்லக்ஷ்மி இணைந்து நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையைஎழுதியுள்ளார் பிரபலஒளிப்பதிவாளர் M.V.பன்னீர்செல்வம். உள்ளே வெளியே, மக்களாட்சி, ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில்உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் 'மிருகா'வின்ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார்.J.பார்த்திபன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே ஒரு திரைப்படத்தில்புலி அதிக நேரம் வருவது இந்தப் படத்தில்தான் என்கிறார்கள் படக்குழுவினர்.

இன்று தனுஷ் வெளியிட்டுள்ள'I am a bad boy' பாடல், படத்தில் ஸ்ரீகாந்த்தின் கேரக்டரை விளக்கும் பாடலாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் அருள்தேவ் 'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பீ' உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'பாகுபலி', 'நடிகையர் திலகம்' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். காடு, புலி எனவிஷுவல்- சௌண்ட் ட்ரீட்டாகஇந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியிட காத்திருக்கிறார்கள். தனுஷ் - ஸ்ரீகாந்த், இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. தனது நண்பருக்காக தனுஷ் இன்று வெளியிட்ட இந்தப் பாடல் யூ-ட்யூபில் நல்ல கவனத்தை பெற்றுவருகிறது.

DHANUSH srikanth
இதையும் படியுங்கள்
Subscribe