
'நானே வருகிறேன்', 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி', படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் இயக்கி வருகிற படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கி படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியான. அதில் தனுஷ் இடம் பெறாதது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் 'தி கிரே மேன்' படத்தின் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். மேலும் ஜூலை மாதம் 22-ஆம் தேதி நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக இப்படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். செம ஸ்டைலாக வெளிவந்திருக்கும் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.