Advertisment

ஷாருக்கான் படத்தை வெளியிட்ட தனுஷ் 

dhanush

'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல் குள்ள மனிதராக நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதையடுத்து 29 ஆண்டுகள் கழித்து தற்போது இதே போல் குள்ள மனிதராக நடிகர் ஷாருக்கான் 'ஜீரோ' படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் இப்படத்தை தனுஷ் நடித்த 'அம்பிகாபதி' படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். மேலும் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கும் இப்படத்தில் பரம எதிரிகளான ஷாருக்கானும், சல்மான் கானும் ஒரு காட்சியில் சேர்ந்து நடித்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுகிறார்கள். இதற்கிடையே இப்படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருப்பது இருவரது ரசிகர்களையும் மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/89aTDByJTz4.jpg?itok=6Vt9SPQ6","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment
zero shahrukhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe