/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/263_12.jpg)
தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள்வைத்துள்ளார்.
இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ கடந்த 9ஆம் தேதி வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில் ,அமைந்திருந்த இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் ‘வாட்டர் பாக்கெட்’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். கானா கதிர் என்பவர் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடல் சந்தீப் கிஷனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் கானா காதல் பாடலாக வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)