a

ஆஸ்கர் அகாடமி நிர்வாகத்தின் கீழ் மார்கரெட் ஹெரிக் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்யும் விதமாக, பல கதைகள், புத்தகங்கள், திரைக்கதைகள் போன்றவற்றை பார்வைக்கு வைத்து வருகின்றனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="47b9611c-4ac5-4106-a169-8406cd00e413" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_20.jpg" />

Advertisment

1928ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்கர் நூலகத்தில் லகான் (2001), தேவதாஸ் (2002), சக் தே இந்தியா (2007), ராக் ஆன் (2008), ராஜநீதி (2010), குசார்சிஹ் (2010), ஆர். ராஜ்குமார் (2013), ஹேப்பி நியூ இயர் (2014), பார்ச்ட் (2015), பேபி (2015), 'செல்லோ ஷோ' (2022), ஸ்விகடோ (2022) ஆகிய இந்திய படங்களின் திரைக்கதைகளும் இடம் பெற்றிருக்கிறது. மேலும் தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான ‘பார்க்கிங்’இடம் பெற்றதாக கடந்த மே மாதம் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இந்த ஆஸ்கர் நூலகத்தில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் திரைக்கதை இடம்பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ராயன் படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மகேஷ் பாபு, பா.ரஞ்சித், கார்த்தி, ராகவா லாரன்ஸ்,லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பாராட்டினர்.

Advertisment