/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_112.jpg)
தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிரது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூனில் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். தனுஷோடு ஏ.ஆர் ரஹ்மானும் பாடியுள்ள நிலையில் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில், இந்தப் பாடல் அமைந்துள்ள நிலையில் தனுஷின் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. ‘அரை ஜானுவயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையிர கூட்டமில்ல, ‘நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும், நம்ம கையில இல்ல’ உள்ளிட்ட வரிகள், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்படம் ஜுன் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)