/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/83_34.jpg)
இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோவாக இருக்கும் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். ராஜ்கிரண், ரேவதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து 'நான் ருத்ரன்' என்ற தலைப்பில் ஒரு படம் தொடங்கியதாகவும் அதில் நாகர்ஜுனா, அதிதி ராவ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து, பின்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தனுஷ் மீண்டும் இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்தவுள்ளதாகசமீபத்தில் தகவல் வெளியானது. விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பற்றிய கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு 'ராயன்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார் தனுஷ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)