/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/28_34.jpg)
தனுஷ், தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தை 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியான 'வாத்தி' படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
இதனிடையே சென்னை போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார் தனுஷ். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த சிவராத்திரி அன்று சிறப்பு பூஜை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட வீட்டைத்தனது தாய், தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் தனுஷ். இந்த நிகழ்வில் இயக்குநரும் தனுஷ் ரசிகர் மன்ற தலைவருமான சுப்ரமணியம் சிவா கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் வீடு இருக்கும் அதே பகுதியில் தான் அவரது முன்னாள் மாமனார் மற்றும் நடிகர் ரஜினியின் வீடு உள்ளது எனது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)