/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_37.jpg)
வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடலுக்கு செல்வராகவன் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை பார்க்கையில் தனுஷ் கதாபாத்திரத்தின் பின்னணியை விரிவாக சொல்லியிருப்பது போல் அமைந்துள்ளது. இந்த பாடல் யூ- ட்யூபில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்பாடல் முழுவதும் தனுஷ் புகைபிடிப்பது போல் அதிக காட்சி இடம்பெற்றுள்ளது, படத்திலும் தொடர்வது போல் தெரிகிறது.
ஏற்கனவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் (ரகுவரன் கதாபாத்திரம்) புகைபிடித்த காட்சி தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்பு உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் 'நானே வருவேன்' பாடலில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதால் சிலர் புகைபிடிப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமூக ஆர்வலர்கள், தனுஷ் போன்ற முன்னணி பிரபலங்கள் தொடர்ந்து தன் படங்களில் இது போன்று காட்சி வைப்பது அவரது ரசிகர்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் என கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)