செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 15-ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இம்மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் ரிலீஸ் தேதி குறித்து இந்த டீசரில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.