dhanush in naane varuven  Rendu Raaja  Lyric Video released

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் ரெண்டு ராஜா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில், தனுஷின் இரண்டு கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசுவது போல் தெரிகிறது. இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். தனுஷோடு இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவும் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் வரும் "அரக்கன் ஒருவன் இல்லையென்றால்...இறைவன் மகிமை புரியாது" வரும் வரிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment