சோழர்களுடன் போட்டி போடும் வீரா சூரா

dhanush naane varuven release date announced

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே 'நானே வருவேன்' படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 29ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை தனுஷ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளனர். இப்படம் வெளியாகவுள்ள அடுத்த நாள் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக 'சோழா சோழா' பாடல் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போல் நானே வருவேன் படத்தில் 'வீரா சூரா' பாடலும் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

actor dhanush manirathnam naane varuven ponniyin selvan selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe