dhanush naane varuven new update

Advertisment

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் பின்னணி இசைசேர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இது தொடர்பான புகைப்படத்தை தனுஷ் தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "யுவனின் மேஜிக். முழுவீச்சில் இசைசேர்ப்பு பணிகள் நடைபெறுகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதே போல் செல்வராகவனும் தனது விட்டார் பக்கத்தில் அவரும் யுவனும் பணியாற்றுவது போல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இம்மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment