dhanush in naane varuven booking opens in usa

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த 15-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இதனிடையே 'நானே வருவேன்' படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அங்கு உள்ள ஒரு பிரபல திரையரங்கம் படத்திற்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான ஒரு புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே படக்குழு விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒரு நாள் முன்னதாக நானே வருவேன் படம் வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் உலகெங்கும் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.