dhanush movie neek first single released

தனுஷ் தயாரித்து, இயக்கி வரும் திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் தனுஷின் சகோதிரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் அப்டேட்டை பகிர்ந்த படக்குழு, அதில் பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடனமாடியுள்ளதாகவும் ‘கோல்டன் ஸ்பாரோ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளதாக முன்பு அறிவித்திருந்தது. இந்த பாடல் குறித்து அண்மையில் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “தனுஷூடன் இணைந்து இந்த பாடலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, அதில் பிரியங்கா மோகன் க்யூட்டாக நடனமாடியிருந்தார். இப்பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு ‘தெருக்குரல்’ அறிவு இப்பாடலை எழுதியுள்ளார் என அறிவித்தது. இது தொடர்பாக தனுஷின் மேலாளர், ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடலில் ஒரு சில வரிகளை மட்டும் தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளதாக கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை சுபலாஷினி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலில், ‘ஸ்வீட்டா... ஹார்ட்டா... தொனைக்கு நான் இருக்கவா... தெனம் தெனம் துடிக்கவா... இருக்கி நான் புடிக்கவா... இலக்கணம் படிக்கவா...’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இளைஞர்களின் காதலை விவரிக்கும் வகையில் இருக்கும் இப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.