dhanush movie director entry in bollywood industry

Advertisment

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலாஜி மோகன். குறுகிய காலத்திலே முன்னணி நடிகரான தனுஷை வைத்து 'மாரி' மற்றும் 'மாரி2' படத்தை இயக்கினார். பிறகு 'அஸ் ஐயம் சபஃரிங் ஃபரம் காதல்' என்ற வெப் சீரிஸை எடுத்தார். இயக்கம் மட்டுமின்றி 'ஓபன் விண்டோ' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'மண்டேலா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பாலாஜி மோகன் இந்தியில் அறிமுகமாகவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'க்ளிக் சங்கர்' என்ற படத்தை இயக்கவுள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தை 'ஜங்லீ பிக்ச்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.