Advertisment

ஆண்டி என அழைத்த 4 வயது சிறுமி... திட்டித் தீர்த்த தனுஷ் பட நடிகை... கொந்தளித்த இணையவாசிகள்...

தனுஷ் பாலிவுட்டில் முதன் முதலில் நடித்த படம் ராஞ்சனா. இந்த படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் சோனம் கபூர், சுவாரா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்று வெளியானது.

Advertisment

swara

சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் இடத்தை பிடிப்பவர் சுவரா பாஸ்கராக இருப்பார். அவர் எது பேசினாலும் சர்ச்சை, அறிவுரை கூறினாலும் சர்ச்சை என்று சுவாரா பாஸ்கரை சர்ச்சை துறத்திக்கொண்டே இருக்கும். அவரும் அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஒரு பிரபல நடிகை பொது மேடையில் அந்த கருத்தை தெரிவித்தால் சர்ச்சையாகும் என தெரிந்தும் அவர் யோசிக்காமல் கூறிவிடுவார். கேட்டால் நான் உண்மையாக இருக்கிறேன் என்பார். தற்போது தன்னை ஆண்டி என அழைத்த ஒரு நான்கு வயது குழந்தை நட்சத்திரத்தை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக அவர் ஒரு விவாத மேடையில் கூறியது வைரலாகி வருகிறது.

Advertisment

ஹிந்தி மொழி சினிமா நிகழ்ச்சியான ‘சன் ஆஃப் அபிஸ்’நிகழ்ச்சியில் சுவரா பாஸ்கர் கலந்துகொண்டார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுவரா சோப்பு விளம்பரம் ஒன்றில் கலந்துகொண்டாராம். அப்போது அதில் தன்னுடன் நடித்த நான்கு வயது குழந்தை நட்சத்திரம் தன்னை ஆண்டி என அழைத்தது பிடிக்காமல், அந்த குழந்தையை வசைப்பாடினேன் என்று டிவி நிகழ்ச்சியில் தைரியமாக தெரிவித்துள்ளார்.

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="dbefba41-15d3-403f-9d92-c3776fac289d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_12.jpg" />

இந்த விஷயம் அப்படியே சமூக வலைதளங்களில் சூடுபிடிக்க, அவர் பேசிய அந்த வீடியோ காட்சி மற்றும் வைரலாகி வந்தது. மேலும் சுவரா ஆண்டி என்று ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வந்தனர் இணையவாசிகள். இதுகுறித்து சுவரா பாஸ்கரிடம் கேட்டபோது, ‘நான் அந்த குழந்தையை நேரில் திட்டவில்லை, என் மனதில் அப்படி திட்டிக்கொண்டேன், அதைதான் அந்த நிகழ்ச்சியில் கூறினேன்’ என்று கூறினார். எப்படி ஒரு குழந்தையை இப்படி திட்ட இவருக்கு மனசு வந்தது இவர் ஒரு மனிதரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Bollywood swara baskar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe