Skip to main content

பலரும் எதிர்பார்த்த தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

dhanush

 

‘கர்ணன்’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் 'டி-43'. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நடிகை ஸ்மிருதி வெங்கட், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இத்தகவலை தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்