மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரௌடி பேபி என்ற பாடல் யூ-ட்யூபில் வெளியானது முதல் செம வைரலாகி வருகிறது. வெளியான ஆறு மாதத்திலேயே 500 மிலியன் பேர் இந்த பாடலை பார்த்திருப்பது சாதனையாகியுள்ளது.

Advertisment

rowdy baby

மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இந்த மாரி 2 படத்தையும் இயக்கியுள்ளார். கடந்த படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அனிருத் இல்லாமல் இந்த பாகத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிந்தார். மேலும் ரௌடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி தீ என்ற பெண் பாடலருடன் இனைந்து பாடினார். படம் வெளியாகுவதற்கு முன்பே இந்த பாடல் செம ஹிட் அடித்தது. பலரும் இது வீடியோவாக பார்க்க எப்படி இருக்கும், டான்ஸ் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் இருக்க பிரபுதேவா இந்த பாடலுக்கு நடன இயக்குனர் என்று சொன்னதும் மேலும் ஆவல் கூடுதலானது.

Advertisment

இப்படி ஆவலை கூட்டிக்கொண்டே இருந்த இந்த பாடலின் வீடியோ அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் வெளியானது. படம் வெளியானவுடனேயே இந்த பாடலின் வீடியோ யூ-ட்யூபில் வெளியானது. இதனை அடுத்து மலமலவென இந்த பாடல் உலகம் முழுக்க வைரலாக தற்போது ஐந்தே மாதங்களில் 500 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. அதாவது உலகம் முழுக்க 50 கோடி பேரால் பார்க்கப்பட்டடுள்ளது.

தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பாடல் ஒன்று 50 கோடி வியூஸ் பெற்றுள்ளது இதுவே முதன் முறையாகும். இதே நிலை இந்த பாடலுக்கு நேர்ந்தால் 1 பில்லியன் வியூஸ் கூட அசால்ட்டாக கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment