தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் 'தி க்ரே மேன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே நடிகர் தனுஷ் அமெரிக்கா விரைந்தார். அதன் பிறகு, அங்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட தனுஷ், மார்ச் மத்தியில் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், கலிஃபோர்னியாவில் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் சக நடிகருடன்எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், ஓய்வு நேரத்தில் குடும்பத்தினருடன்எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகின்றன.