Advertisment

‘குபேரா’ பட ட்ரைலர் அப்டேட்; படக்குழு செய்த மாற்றம்

dhanush kubera trailer update

தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

Advertisment

‘இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் படத்தின் அளவு இருக்கிறது. இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட புரொமோஷனில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் இன்று ஹைதராபாத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இதில் படத்தின் ட்ரைலரும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அஹமதாபாத்தில் நடந்த விமான விபத்து காரணமாக இந்நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகின்ற 15ஆம் தேதி நடக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் நடப்பதாகவும் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் அந்த டிக்கெட்டையே இதற்கும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ட்ரைலர் நாளை(14.06.2025) வெளியாகும் என கூறியுள்ளனர்.

nagarjuna Kubera actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe