‘எதுவுமே அவங்ககிட்ட இருக்காது’ - அரசாங்கத்தை ரிஸ்கில் விடும் யாசகர்

dhanush kubera trailer released

தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட புரொமோஷனில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ட்ரெய்லரை பார்கையில், ஒரு கோயிலில் யாசகம் பெறுபவராக இருக்கும் தனுஷ், நாகர்ஜூனாவால் வளர்க்கப்படுவதாகக் காட்சிகள் வருகிறது. பின்பு அவர் ஒரு கட்டத்தில் நாகர்ஜூனாவை விட்டு வெளியேற அது நாகர்ஜூனாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துவது போலவும் அடுத்த கட்ட காட்சிகள் நகர்கிறது. மேலும் அரசுக்கும் அது பெரியத் தலைவலியாக மாறும் அளவிற்கு செல்கிறது. அதற்கேற்றவாறு, ‘ஒரு யாசகன் கவர்மெண்டை ரிஸ்கில் நிறுத்தியிருக்கான்’ என்ற வசனம் இடம்பெறுகிறது. பின்பு தனுஷை நாகர்ஜூனா தேட ஆனால் தனுஷோ ராஷ்மிகாவுடன் இணைந்து அரசு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக செயல்பட இறுதியில் அவரே ஒரு பெரிய அதிகாரத்துக்கு வரும்படியான காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெறுகிறது. அதற்கேற்றார் போல், ‘காசு,போலீஸ்... எதுவுமே அவங்ககிட்ட இருக்காது’ என தனுஷ் ராஷ்மிகாவிடம் சொல்கிறார். யாசகராக இருக்கும் ஒருவர் ஒரு பெரிய அதிகாரத்தில் எப்படி வருகிறார் என்பதை அமோஷன், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

actor dhanush Kubera nagarjuna
இதையும் படியுங்கள்
Subscribe