dhanush kubera first single promo released

தனுஷ் நடிப்பு இயக்கம் என பயணித்து வருகிறார். இப்போது தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். இது போக அவரே இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தையும் கவனித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதில் தனுஷின் 51வது படமான குபேரா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, பாங்காங், மும்பை பகுதிகளில் நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அடுத்தடுத்து வெளியானது. பின்பு படத்தின் ஃபர்ஸ்ட் கிளிப்ம்ஸ் வெளியான நிலையில் அதில் யாசகம் பெறும் நபராக தனுஷ் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘போய் வா நண்பா’ என தொடங்கும் பாடல் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் பாடலின் புரொமோவை வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ் தனது நண்பர் மறைவின் இறுதி ஊர்வலத்தில் ஆடுவது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை தனுஷே பாடியுள்ளார். விவேகா எழுதியுள்ளார். இப்பாடலின் தெலுங்கு பதிப்பையும் தனுஷே பாடியுள்ளார். மற்ற படி மீதமுள்ள பதிப்புகளில் வேறுபாடகர்கள் பாடியுள்ளனர்.

Advertisment