Advertisment

பிரேக் எடுக்காமல் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய தனுஷ்...

அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் , துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதன்பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் அசுரன் ஷூட்டிங் முடிந்தவுடன் லண்டனில் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. இந்த முதல் கட்ட ஷூட்டிங் முடிவடைந்ததும். பட்டாஸ் படத்திற்கான மீதமுள்ள காட்சிகளில் நடித்து கொடுத்தார்.

Advertisment

dhanush

இதன்பின்தான் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்த்திக் சுப்புராஜின் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அதில் நடிப்பதற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டிருந்தார் தனுஷ். இந்த படபிடிப்பின் புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பல விஷயங்கள் லீக்காகின. இதில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி என்றும், அதுதான் படத்தின் டைட்டிலாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில் இந்த டி40 படபிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பை பட்டியில் நடந்து வந்தது. படபிடிப்பின் இடையே தனுஷ் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பின் இந்த ஷூட்டிங்கும் முடிவடைந்தது.

இதன்பின் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். திருநெல்வேலியில் இந்த படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. 90கள் காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை. அதில் ரஜினி ரசிகராக தனுஷ் நடிக்கின்றாராம்.

'கர்ணன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ராஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகர் லால், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

mariselvaraj karnan DHANUSH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe