dhanush Kadhal Fail song released

ராயன் படத்திற்கு பிறகு ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதோடு அதில் நடித்தும் வருகிறார். இப்படம் தனுஷின் 52வது படமாக உருவாகி வருகிறது.

Advertisment

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குவதோடு மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரது கடந்த செப்டம்பரில் வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘காதல் ஃபெயில்’ வெளியாகியுள்ளது. சூப் சாங்காக வெளியாகியுள்ள இந்தப் பாடலை தனுஷ் வரிகள் எழுதி பாடவும் செய்துள்ளார். ஏற்கனவே இவர் எழுதி பாடிய சூப் சாங்கன ‘ஒய் திஸ் கொலைவெறி...’ பாடல் பெரும் வரவேற்பை பெற்று யூட்யூபில் பல்வேறு சாதனை படைத்தது. அதே ஸ்டைலில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.