dhanush

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisment

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ec0d033c-a177-4531-9a33-769a1d7b3eea" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_50.jpg" />

Advertisment

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததையடுத்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. பின்னர், படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் காதலர் தினத்தையொட்டி ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், நடிகர் தனுஷ் கடந்த 2-ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் போல ஜகமே தந்திரம் படம் திரையரங்கில் வெளியாகுமென நானும் நம்புகிறேன்' எனப் பதிவிட்டார். நடிகர் தனுஷின் இந்தப்பதிவு, படத்தை திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சில ரசிகர்கள், ஜகமே தந்திரம் படத்தை திரையரங்கில் காணவே விரும்புகிறோம் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, படத்தை திரையரங்கில் வெளியிடக்கோரி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cb83d08a-ffdb-4cf0-a7f5-d325c876337e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_16.jpg" />

ரசிகர்களின் இக்கோரிக்கையை தயாரிப்பாளர் மற்றும் தனுஷ் கவனத்தில் எடுப்பார்களா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.