dhanush issue Consecutive meeting of the Association Executive Committe

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், என அனைவரும் கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4dee0c8a-c2e2-4606-a551-24940e489bce" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_12.jpg" />

இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் ஒன்றாக தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. அவர் மீது எந்த புகாரும் இதுவரை நிலுவையில் இல்லை, எங்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இரு சங்கங்களும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையானது. இந்த நிலையில் தனுஷ் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு இன்று கூடுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் சங்க செயற்குழுவும் விரைவில் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.