Published on 26/04/2018 | Edited on 28/04/2018

நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் 'தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் ஃபகிர்'. இதே பெயரை கொண்ட ஐக் வார்ட்ரோபின் பிரபல நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். வருகிற மே 30ஆம் தேதி பிரான்சில் ரிலீசாக இருக்கும் இப்படத்தை உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதில் நடிகர் தனுஷும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் வருகிற மே 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.